
களியக்காவிளை குளப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெபா (வயது 28). இவர் நேற்று காலையில் தனது குழந்தைகளுக்கு உணவு வாங்குவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்து ஒருவர் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனைப்பார்த்த பொதுமக்கள் அங்கு வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்ததும் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து களியக்காவிளை போலீசில் ஜெபா புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜெபாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது மெதுகும்பல் பகுதியை சேர்ந்த ஆதர்லால் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.