search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

    வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை தாண்டியதால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இது உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயரத் தொடங்கியது. 66 அடியை எட்டியபோது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது மழை குறைந்த நிலையில் அணைக்கு 1961 கன அடிநீர் வருகிறது. இருந்தபோதும் அணையின் நீர்மட்டம் 68.60 அடியாக உள்ளது. இதனால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    மேலும் நேற்று 160 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2190 கன அடியாக உயர்த்தப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.60 அடியாக உள்ளது. 1173 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1650 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. 205 கன அடி நீர் வருகிறது. 90 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 64 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடியில் 0.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலை கூடலூர், லோயர்கேம்ப், கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, தேவதானப்பட்டி பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.

    Next Story
    ×