search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் பேட்டியளித்த போது எடுத்த படம்.
    X
    மு.க.ஸ்டாலின் பேட்டியளித்த போது எடுத்த படம்.

    உள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திமுக வரவேற்கிறது- மு.க.ஸ்டாலின்

    உள்ளாட்சி தேர்தல் வழக்கில் ஜனநாயகத்தை காக்கக்கூடிய வகையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அளித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தல் வழக்கில் ஜனநாயகத்தை காக்கக்கூடிய வகையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன்.

    தி.மு.க.வை பொறுத்தவரை உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்காக நீதிமன்றத்தை நாடவில்லை. தொகுதி வரையறை சரியாக இல்லை என்ற காரணத்தாலும், முறையான இடஒதுக்கீடு இல்லை என்பதாலும் கோர்ட்டுக்கு சென்றோம்.

    தி.மு.க. எடுத்து வைத்த நியாயமான கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெளிவாக புரிந்துகொண்டு தமிழக தேர்தல் ஆணையத்தை பல கேள்விகள் கேட்டுள்ளனர். புதிய மாவட்டங்களில் தொகுதி வரையறை செய்யப்பட்டுள்ளதா? இப்போது மாவட்டங்களை பிரிக்க வேண்டிய அவசியம் என்ன? உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளது.

    எங்களை பொறுத்தவரை இன்றைய தீர்ப்பு தி.மு.க. கோரிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். தற்போது தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் மறுவரையறை முறையாக கடைபிடிக்கப்பட்ட பிறகே தேர்தல் நடத்த வேண்டும். மீதி உள்ள 27 மாவட்டங்களில் இடஒதுக்கீட்டை பின்பற்றி தேர்தலை நடத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு சொல்லி உள்ளது.

    எனவே ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாக தேர்தல் நடத்த வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சியும் முறையாக தேர்தலை சந்திக்க வேண்டும். தி.மு.க. துணிச்சலாக, தெளிவாக தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×