search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநாவுக்கரசு
    X
    திருநாவுக்கரசு

    வெங்காய விலை உயர்வுக்கு பொறுப்பற்ற பதிலை கூறுவதா?- நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கண்டனம்

    வெங்காய விலை உயர்வுக்கு பொறுப்பற்ற பதிலை கூறுவதா என்று நிர்மலா சீதாராமனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கண்டனம் தெரித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு எம்.பி. திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா மத்தியில் 2-வது முறையாக பதவி ஏற்றதற்கு பின்னர் ஜனநாயகம் மிக மோசமான நிலமைக்கு சென்று விட்டது. ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக பிரித்து தலைவர்களை வீட்டு சிறையில் அடைத்து வைத்து ஜனநாயக படுகொலை, மக்கள் விரோத போக்கை கையாண்டுள்ளனர். மேலும் இந்திய தலைவர்களை அனுமதிக்காமல் வெளிநாட்டவர்களை ஜம்மு காஷ்மீருக்கு அழைத்து சென்றுள்ளனர்.

    மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க பா.ஜனதா முயன்றது. ஆனால் சிவசேனா, காங்கிரசுடன் இணைந்ததால் மக்கள் தீர்ப்புக்கு ஏற்ப ஆட்சி அமைந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. பல மாநிலங்களில் குறுக்கு வழியில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்ற முயல்கிறது. சோனியா காந்தி தலைமையில் மீண்டும் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும். தற்போது பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது. வெங்காய விலை உயர்வு குறித்து கேட்டால் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை என பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகிறார்.

     

    நிர்மலா சீதாராமன்

    பா.ஜனதா ஆட்சியில் வேலையின்மை 30 கோடியாக உயர்ந்துள்ளது. அனைத்து பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் வடிவேலு காமடி போல வரும் ஆனால் வராது என்ற நிலையிலேயே உள்ளது. முறையாக விதிகளை பின்பற்றி தேர்தல் அறிவித்திருந்தால் தி.மு.க. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்காது.

    பா.ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×