search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற போலீஸ்காரருக்கு அபராதம்

    நெல்லையில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற போலீஸ்காரருக்கு அபராதம் விதிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    நெல்லை:

    மோட்டார்சைக்கிள் மற்றும் மொபட்டுகளில் பயணம் செய்வோர் தலையில் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையொட்டி ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்த சட்டத்தை அமல்படுத்தும் போலீசாரும் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று நெல்லை மாநகர போலீஸ் கமி‌‌‌ஷனர் தீபக் தாமோர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் நெல்லையில் நேற்று மாலை ஒரு போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீ‌‌ஷ்குமார் அவரை பிடித்து ரூ.100 அபராதம் விதித்தார். நவீன கையடக்க கருவியில் இருந்து அச்சிடப்பட்ட அபராத ரசீதும் போலீஸ்காரரிடம் வழங்கப்பட்டது. இந்த காட்சிகள் மற்றும் அபராதம் விதிப்பு ஆகியவை சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×