search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலங்கார வளைவு புதுப்பொலிவுடன் இருந்ததையும், லாரி மோதி இடிந்து கிடந்ததையும் படங்களில் காணலாம்.
    X
    அலங்கார வளைவு புதுப்பொலிவுடன் இருந்ததையும், லாரி மோதி இடிந்து கிடந்ததையும் படங்களில் காணலாம்.

    ராஜபாளையத்தில் லாரி மோதியதில் சேதம் அடைந்த அலங்கார வளைவு

    ராஜபாளையத்தில் பாரம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத வகையில் அலங்கார வளைவு மீது மோதியதில் கீழே விழுந்தது.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் கடந்த 1936-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த ராமுன்னி மேனன் என்பவரால் அலங்கார வளைவு ஒன்று அமைக்கப்பட்டது. பின்னர் இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததை நினைவு கூரும் வகையில் சுதந்திர தின வளைவாக அந்த வளைவு மாற்றப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் சுதந்திர தினத்தையொட்டி ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தினர் அந்த வளைவுக்கு மூவர்ணக் கொடி நிறத்தில் பெயிண்ட் அடித்து அழகுபடுத்தினர். மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் அந்த வளைவு காட்சி அளித்தது.

    இந்த நிலையில் நேற்று காலை அதிக பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத வகையில் இந்த வளைவு மீது மோதியது.

    இதில் அந்த அலங்கார வளைவு இடிந்து கீழே விழுந்தது.

    இது குறித்து மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் லாரியை போலீஸ் நிலையம் கொண்டு சென்று டிரைவர் மணி என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×