search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்டு தீர்ப்பு
    X
    கோர்ட்டு தீர்ப்பு

    வாலிபரை வெட்டிய வழக்கில் அண்ணன்-தம்பிக்கு 4 ஆண்டு சிறை

    கபிஸ்தலம் அருகே வாலிபரை வெட்டிய வழக்கில் அண்ணன், தம்பிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள வடசருக்கை பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் ரமேஷ் (வயது 40) விவசாயி. இவருக்கும் இவரது உறவினரான எதிர் வீட்டில் வசிக்கும் முருகேசன் மகன்கள் குமரேசன் (37), பிரபாகரன் (34) ஆகியோருக்கும் குடும்ப பிரச்சினை நீண்ட நாளாக இருந்து வந்தது. 

    இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு குமரேசன் மற்றும் அவரது தம்பி பிரபாகரன் ஆகிய இருவரும் சேர்ந்து ரமேசை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த வெட்டப்பட்ட ரமேஷ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்த வழக்கு கும்பகோணம் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கும்பகோணம் முதன்மை நீதிமன்ற நீதிபதி வழக்கை விசாரித்து குமரேசன், பிரபாகரன் ஆகிய இருவருக்கும் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
    Next Story
    ×