search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்
    X
    ஒகேனக்கல்

    ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மீண்டும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
    ஒகேனக்கல்:

    தமிழக-கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் வந்தது. இது இன்று காலை 9,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றின் இருபுறமும் தொட்டபடி தண்ணீர் சீறிபாய்ந்து வருகிறது.

    ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    காவிரி ஆற்றில் கடந்த 3 மாதங்களாக தண்ணீர் குறைவதும், அதிகமாகவும் இருந்ததால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை இன்று வரை நீடிக்கிறது.

    ஆனாலும், தடையை மீறி சில சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் பரிசல் சவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க மீண்டும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    மேலும், அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளிக்கக் கூடாது என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுவிக்கப்பட்டு உள்ளது. மெயின் அருவியின் அருகே யாரும் செல்லாதீர்கள் என்று அறிவுரை கூறி வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு படை துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×