search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் கலெக்டர்
    X
    திருவள்ளூர் கலெக்டர்

    மழை வெள்ள பாதிப்பு குறித்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் - திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

    மழை வெள்ள சேதங்கள் குறித்து தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி எண்களை திருவள்ளூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்ப்பாசன ஏரிகள் 3227-ம் சிறு பாசன ஏரிகள் என 654-ம் உள்ளன. இயற்கை அளிக்கும் மழை நீரை வீணாக்காமல், முழுமையாக சேர்த்து வைக்கும் வகையில் குடிமராமத்துப் பணிகள் திட்டத்தால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டன.

    இதனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பின.

    மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசன ஏரிகள் 3227-ல் 308 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 865 ஏரிகள் 75 சதவிகிதமும், 762 ஏரிகள் 50 சதவீகிதமும் நிரம்பி இருக்கிறது.

    சிறுபாசன ஏரிகள் 654-ல் 62 ஏரிகள் 100 சதவிகிதத்தையும், 155 ஏரிகள் 75 சதவிகிதமும், 208 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பி உள்ளது.

    பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் 576-ல் 117 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது. 75 ஏரிகள் 75 சதவிதமும், 132 ஏரிகள் 50 சதவிகிதமும் 168 ஏரிகள் 25 முதல் 50 சதவிகிதம் வரை நிரம்பி உள்ளன.

    ஆறு, ஏரி, குளம் போன்றவற்றில் யாரும் குளிக்கவோ, விளையாடவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம். மழை வெள்ள சேதங்கள் குறித்து 24 மணி நேரமும் செயல்படும் 044 27664177 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9444317862 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி கூறினார்.
    Next Story
    ×