search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழுகிய தக்காளிகள் கொட்டப்பட்டுள்ள காட்சி.
    X
    அழுகிய தக்காளிகள் கொட்டப்பட்டுள்ள காட்சி.

    பாலக்கோட்டில் அழுகிய தக்காளியுடன் கழிவுநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம்

    பாலக்கோட்டில் அழுகிய தக்காளியுடன் கழிவுநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட தக்காளி மார்க்கெட்டில் தினந்தோறும் 200 டன் அளவிற்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, பேளாரஹள்ளி, பொப்பிடி, சென்னப்பன்கொட்டாய், மாரண்டஹள்ளி, தும்பல ஹள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் தக்காளிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இதனை சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து வாங்கி செல்வார்கள். 

    கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டம் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சில விவசாயிகள் தக்காளிகளை மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்று விட்டு செல்கின்றனர். அப்படி விற்பனையாகாத தக்காளிகளை மார்க்கெட்டில் உள்ள சாக்கடை அருகே கொட்டி விட்டு செல்கின்றனர். அவ்வாறு தக்காளிகளை கொட்டி செல்வதால் சாக்கடையில் தக்காளி தேங்கி கிடக்கின்றன.

    இந்த மார்க்கெட்டில் பல மாதங்களாக கழிவுநீர், மழைநீர் மற்றும் அழுகிய தக்காளி போன்றவைகள் ஒரேஇடத்தில் தேங்கி கிடப்பதால் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கழிவுநீர் வெளியேறுவதற்கு போதிய கால்வாய் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

    எனவே, இது குறித்து உரிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×