search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    காரிமங்கலம் வாரசந்தையில் வெங்காய விலை இருமடங்காக உயர்வு

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வாரசந்தையில் வெங்காய விலை இன்றும் இருமடங்காக உயர்ந்துள்ளது.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வாரசந்தையில் பெரிய மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை இன்று கிடுகிடுவென விலை உயர்ந்து ரூபாய் 130 எட்டியுள்ளது.

    கடந்த வாரம் 1 கிலோ வெங்காயம் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. இன்று பெரிய வெங்காயம் கிலோ 110, சின்ன வெங்காயம் கிலோ 130 என விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக  வடமாநிலங்களில் தொடர்ந்து பருவமழை பொழிந்து வருவதால் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தைபோன்ற இந்தவாரமும் விலை இருமடங்காய உயர்ந்துள்ளது. 

    இதே நிலை நீடித்தால் வரும் வாரங்களில்  பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை 200 ரூபாய் தொடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

    இதேபோல் காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது. கேரட் கிலோ 60, பீட்ரூட் கிலோ 70, பீன்ஸ் கிலோ 40, கத்திரிக் காய் கிலோ 40, பாகற்காய் கிலோ 50, வெண்டைக்காய் கிலோ 30, முட்டைகோஸ் கிலோ 40, தக்காளி 20, அவரைக்காய் 30, முள்ளங்கி 30, கொத்தவங்கரை 40 என விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×