
கோவில்பட்டி:
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவராக இருப்பவர் பி.டி.அரசகுமார். இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று பேசினார். இது பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மு.க. ஸ்டாலினை வாழ்த்தி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தும், பி.டி. அரசகுமாரை பா.ஜ.க.வில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பா.ஜ.க. போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் பி.டி. அரசகுமார் படத்தினை தீயிட்டு எரித்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.