என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் இன்று காலை த.மு.மு.க நிர்வாகி விபத்தில் பலி
Byமாலை மலர்3 Dec 2019 10:50 AM GMT (Updated: 3 Dec 2019 10:50 AM GMT)
கோவையில் இன்று காலை மோட்டார் சைக்கிள் விபத்தில் த.மு.மு.க நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை:
கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அப்துல்பஷீர் (வயது 36). இரும்பு வியாபாரி. மற்றும் த.மு.மு.க.வின் தெற்கு பகுதி தலைவராக இருந்தார். இவர் கேரள மாநிலம் மன்னார்காட்டில் உள்ள தனது குடும்பத்தினரை பார்த்து விட்டு இன்று காலை மோட்டார் சைக்கிளில் கோவைக்கு புறப்பட்டார்.
எட்டிமடை அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நின்ற லாரியின் பின்பக்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அப்து ல்பஷீர் படுகாயம் அடைந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×