search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி திருமணம் நிறுத்தம் (கோப்புப்படம்)
    X
    சிறுமி திருமணம் நிறுத்தம் (கோப்புப்படம்)

    கோவில்பட்டியில் சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

    கோவில்பட்டியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட கூசாலிபட்டியைச் சேர்ந்த தர்மர்- முருகலட்சுமி தம்பதி மகன் ஞானசேகருக்கும், வானரமுட்டியைச் சிறுமிக்கும் கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெறவிருப்பதாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்து.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவீட்டாரையும் அழைத்துப் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியடைந்த பின்பே திருமணம் செய்ய வேண்டும் என்றும், 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் செய்வது சட்ட விரோதமான செயல். மீறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்திய பின், சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×