search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருப்பூரில் போலீசில் புகார் கொடுக்க மனைவி சென்றதால் வாலிபர் தற்கொலை

    திருப்பூரில் போலீசில் புகார் கொடுக்க மனைவி சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர் பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரபீக் (வயது 20). இவரது மனைவி நூர்ஜகான். அப்துல் ரபீக்குக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

    இதனால் அவரை வேலைக்கு செல்லுமாறு நூர்ஜகான் கூறி வந்தார். இதன் காரணமாக கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நூர்ஜகான் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று கணவர் குறித்து புகார் கூறி உள்ளார். இதையடுத்து போலீசார் அப்துல் ரபீக்கை அழைத்து சரியாய வேலைக்கு செல்லுமாறு கண்டித்து அனுப்பியதாக தெரிகிறது.

    ஆனால் தொடர்ந்து குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டதால் நூர்ஜகான் மீண்டும் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றார். இதனால் மனமுடைந்த அப்துல் ரபீக் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அனுப்பர் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×