search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணிடம் சில்மி‌ஷம்
    X
    பெண்ணிடம் சில்மி‌ஷம்

    தேனி அருகே பெண்ணிடம் சில்மி‌ஷம்- தட்டிக்கேட்ட கணவருக்கு மிரட்டல்

    தேனி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்ததை தட்டிக்கேட்ட கணவருக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள வீரபாண்டியை அடுத்த தட்டிக்குண்டு மெயின்ரோட்டை சேர்ந்தவர் கண்னன். இவரது மனைவி வினோதினி(வயது27). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மகேந்திரன்(28). சம்பவத்தன்று கண்னன் வேலைக்கு சென்றுவிட்டார்.

    வீட்டில் வினோதினி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மகேந்திரன் அவரிடம் சில்மி‌ஷம் செய்துள்ளார். வினோதினி சத்தம்போடவே அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். மாலையில் கண்னன் வீடு திரும்பியதும் இதுபற்றி வினோதினி கூறினார்.

    உடனே கண்னன் மகேந்திரனிடம் இதுபற்றி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மகேந்திரன் அவரது தந்தை பாலசுப்பிரமணி, மகேந்திரனின் மனைவி இலக்கியா ஆகியோர் சேர்ந்து கண்னனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.

    இது குறித்து வினோதினி அளித்த புகாரின்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்.

    Next Story
    ×