search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன்
    X
    என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன்

    விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி?- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி

    நிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி? என்று என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது குறித்து என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் கூறியதாவது:-

    நாசா எடுத்த நிலவின் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்தேன். அதில் ஒரே ஒரு சிறிய புள்ளியை தவிர வேறு மாற்றங்கள் தெரியவில்லை. எனவே அந்த புள்ளிதான் லேண்டரின் பாகங்களாக இருக்கும் என அக்டோபர் மாதம் 3-ந்தேதி நாசாவுக்கு டுவீட் செய்தேன். இது தொடர்பாக இ-மெயிலும் அனுப்பினேன்.

    என் கண்டுபிடிப்பு குறித்து நாசா பதில் அளிக்க நேரம் எடுத்துக் கொள்ளும் என்று எனக்கு தெரியும். அவர்கள் தொடர்ந்து எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்து, பின்னர் என்னுடைய தகவலை வைத்து ஆராய்ச்சி செய்தபோது நாசாவினால் எளிதாக விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடிக்க முடிந்தது.

    செப்டம்பர் மாதம் 17-ந்தேதி நாசா எடுத்த புகைப்படம் இருளில் எடுக்கப்பட்டது. அதனால் அவர்களுக்கு தெளிவாக தெரியவில்லை. பிறகு அக்டோபர் 15-ந்தேதி புகைப்படத்தில் லேசான வெளிச்சம் இருந்தது. ஆனால் நாசாவினால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    நாசா புகைப்படம்

    நான் அக்டோபரில் எடுத்த புகைப்படத்திலேயே அந்த புள்ளியை கண்டு பிடித்தேன். பின்னர் நாசா, நவம்பர் மாதம் எடுத்த புகைப்படங்களை எடுத்து லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்துள்ளனர்.

    லேண்டர் தரை இறங்கிய குறிப்பிட்ட இடம் பற்றி எனக்கு தெரியாது. நான் இணையதளத்தில் தகவலை சேகரித்தேன். அதன் மூலமே ஆய்வை தொடர்ந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாசாவுக்கு உதவிய சண்முக சுப்பிரமணியனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் அவருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×