search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    திருவள்ளூர் பகுதியில் பலத்த மழை

    திருவள்ளூர் பகுதியில் பலத்த மழையால் சிட்கோ தொழிற்சாலைக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூரில் சிட்கோ தொழிற்பேட்டை இயங்கி வருகிறது இந்த தொழிற்பேட்டை 283 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு 350-க்கும் மேற்பட்டோர் சிறுகுறு தொழில் செய்து வருகின்றனர்.

    இந்த தொழிற்சாலைகளில் கோடிக்கணக்கிலான மதிப்புள்ள எந்திரங்கள் மூலம் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளிகளும் வேலை பார்த்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தொழிற்பேட்டை முழுவதும் தண்ணீரால் சூழ்ந்துள்ளது. சுமார் 100 கம்பெனிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

    புட்லூர் ஏரி மற்றும் அதன் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் மழை நீர் கால்வாய் போதிய பராமரிப்பு இல்லாததால் தொழிற்பேட்டைக்குள் புகுந்து உள்ளதாக தெரிகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே மழை நீரை வெளியற்ற நட வடிக்கை எடுக்க கோரி சிட்கோ தொழிற்பேட்டை கிளை அலுவலகத்தை எஸ்டேட் உற்பத்தியாளர்கள் சஙகத்தினர் முற்றுகையிட்டனர்.

    இது குறித்து தொழிலாளர்கள் கூறும்போது,‘தொழிற் பேட்டைக்குள் மழை நீர் புகுந்ததால் பணி பாதிக்கப்பட்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் தொழிற்பேட்டையில் தேங்கும் மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு தொழிற்சாலைகளை மூட வேண்டிய சூழ்நிலை உருவாகும்’ என்றனர்.

    Next Story
    ×