search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடூர் அணை
    X
    வீடூர் அணை

    வீடூர் அணையில் இருந்து 1,200 கனஅடிநீர் வெளியேற்றம்- கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    விழுப்புரம் மவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வீடூர் அணையில் இருந்து 1,200 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.








    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வீடூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான செஞ்சி, மேல் மலையனூர், பனமலைபேட்டை ஆகிய பகுதிகளில்பெய்த மழையின் காரணமாக தொண்டியாறு, வராகநதி ஆறு வழியாக வினாடிக்கு  1200 கன அடி தண்ணீர் அணைக்கு நீர்வரத்து உள்ளது.

    அணையில் மொத்த கொள்ளவான 32 அடி  ஆகும். கடந்த வாரம் வரை 27அடியாக இருந்த  நீர் மட்டம் தற்போது 31.60அடியாக உயர்ந்துள்ளது. இன்று வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து  நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் அணையிலிருந்து உபரி நீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். 

    அதன் பேரில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டு 1,200 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் சங்கராபரணி ஆற்றில் வந்து சேருகிறது. இதனால் சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். கடந்த  2015-ம் ஆண்டு வீடூர் அணை நிரம்பியது. அதன்பின்னர் தற்போது அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    அணை நிரம்பி உள்ளதால் சுற்றுப்புற கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டு வருகின்றனர். பொதுமக்கள் அணையில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

     அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணையின் கீழ் உள்ள தரைப்பாலம் மூழ்கும் அளவு தண்ணீர் செல்கிறது. எனவே பொதுமக்கள் அந்த வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×