search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    வெங்காயம் விலை உயர்வு நீடிப்பு

    வெங்காயத்தின் வரத்து தொடர்ந்து குறைந்து உள்ளதால் வெங்காயம் விலை உச்சத்தில் நீடித்து வருகிறது. பெரிய வெங்காயம் 90 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் 140 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
    போரூர்:

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் தினசரி விற்பனைக்கு வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கிருந்து வரும் வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    இதன் காரணமாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இன்று காலை 40 லாரிகளில் மட்டுமே வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமாக 60 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    தொடர்ந்து வரத்து குறைந்து உள்ளதால் வெங்காயம் விலை உச்சத்தில் நீடித்து வருகிறது. கோயம்பேடு மார்கெட்டில் நாசிக் வெங்காயம் மற்றும் பெங்களூர் வெங்காயம் முதல் ரகம் மொத்த விற்பனையில் கிலோ ரூ90-க் கும், சில்லரை விற்பனையில் கிலோ ரூ.100-க்கும், ஆந்திரா வெங்காயம் கிலோ ரூ.80-க்கும், சில்லரையில் ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சூப்பர் மார்க்கெட்டுகளில் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் பெங்களூர் வெங்காயங்களை மட்டுமே விற்பனை செய்து வருகின்றனர்.

    அங்கு இரண்டாம் ரக சிறிய வெங்காயம் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மளிகை கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.

    சின்ன வெங்காயம்

    இதேபோல் சின்ன வெங்காயம் எனப்படும் சாம்பார் வெங்காயம் விலையும் குறையாமல் அப்படியே உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 10 லாரிகளில் சின்ன வெங்காயம் வரும். ஆனால் இன்று காலை 2 லாரிகளில் மட்டுமே சின்ன வெங்காயம் வந்தது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120 முதல் ரூ.140 வரை விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனை ஆகிறது.

    வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக இல்லத்தரசிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர் ஓட்டல்களில் வெங்காயத்தின் பயன்பாடு பாதியாக குறைந்து விட்டது.
    Next Story
    ×