search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி உயிரிழப்பு
    X
    தொழிலாளி உயிரிழப்பு

    ஜவ்வரிசி ஆலையில் வி‌ஷவாயு தாக்கி தொழிலாளி பலி

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஜவ்வரிசி ஆலையில் வி‌ஷ வாயு தாக்கி தொழிலாளி பலியானார். மேலும் 4 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி, பள்ளக்காடு பகுதியில் தனியார் ஜவ்வரிசி ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் வழக்கம்போல் நேற்று ஜவ்வரிசி அரைப்பதற்கான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது, ஆலையில் உள்ள 20 அடி ஆழமுள்ள பொல்யூசன் தொட்டியில் இருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டி வேலாயுதம் (வயது 45) என்பவர் தொட்டியின் மேல் மூடியைத்திறந்த உடன் அதில் இருந்த வி‌ஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார்.

    அவரை காப்பாற்றுவதற்காக ஆலையின் உரிமையாளர் மாணிக்கம் முயன்றார். அவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு அந்த தொட்டிக்குள் விழுந்தார்.

    இதனை பார்த்த தொழிலாளர் ஆத்தூர் அம்மம்பாளையத்தை சேர்ந்த மணி (40) என்பவர், அவர்களை மீட்க முயன்றார். வி‌ஷவாயு தாக்கியதால் அவரும் மயக்கம் அடைந்து தொட்டிக்குள் விழுந்தார்.

    உடனடியாக தொழிலாளர்கள் கங்கமுத்து (40) கலியன் (48) ஆகியோர் அங்கு வந்து 3 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் மாணிக்கம், வேலாயுதம் ஆகியோரை வேகமாக வெளியே தூக்கி விட்டனர். பின்னர் மணியை வெளியே தூக்கினர். அவர் வி‌ஷவாயு தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.

    இந்த நிலையில் 3 பேரையும் மீட்ட கங்கமுத்து, கனியன் ஆகியோர் வி‌ஷவாயு தாக்கத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்றனர். இதனால் 5 பேரையும் கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

    மாணிக்கம், கனியன், கங்கமுத்து ஆகியோர் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு இன்று 2-வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலாயுதத்திற்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. அதற்கு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இறந்த மணிக்கு சரண்யா (14), சத்யா (9), விக்கி(8) என்ற 3 குழந்தைகள் உள்ளனர். உரிமையாளரை காப்பாற்ற சென்ற ஊழியர் மணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×