search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் பலத்த மழை - மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

    திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் பெய்த பலத்த மழையால் மரங்கள் சாய்து விழுந்ததில் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    திருச்செந்தூர்:

    வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் நன்றாக பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வருகிறது. மாநகர பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக இன்று சாரல் மழை பெய்தபடி இருந்தது. திருச்செந்தூரில் இன்று காலை சுமார் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் அந்த பகுதிகளில் கழிவு நீர் கால்வாயில் மழைநீர் விழுந்து கடலுக்கு சென்றது. திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கி கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். திருச்செந்தூரில் பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆறுமுகநேரி காயல்பட்டணம், ஆத்தூர், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் பகுதிகளிலும் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் திருச்செந்தூர் -நெல்லை பிரதான நெடுஞ்சாலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் மரம் சாய்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் உடன்குடி செட்டியாபத்து, தண்டுபத்து, லட்சுமிபுரம், சீர்காட்சி, பிச்சிவிளை, பரமன்குறிச்சி, மணப்பாடு, தாண்டவன்காடு, குலசேகரபட்டினம், மாதவன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை ஒரு மணி நேரம் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் முக்கியமான சாலை மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் காலையில் பள்ளிக்க சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    Next Story
    ×