search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தஞ்சையில் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம் - 110 பேர் கைது

    தஞ்சையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 110 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார்.

    25-க்கும் குறைவாக குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் சத்துணவு மையத்தை மூடுவதை கண்டித்தும், காலியாக உள்ள சத்துணவு மையங்களுக்கு பணி நியமனம் வழங்காமல் காலம் தாழ்த்துவது கண்டித்தும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும், பணிக்கொடை ரூ 5 லட்சம் வழங்க வேண்டும், சமையல் எரிவாயு அரசே ஏற்று வழங்க வேண்டும்.

    உணவு செலவு மானியம் ரூ 5 உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறை வேற்ற வலியுறுத்தி என்று தமிழக முதல்வர் கவன ஈர்ப்பு மறியல் போராட்டத்தை சத்துணவு அமைப்பாளர் சமையலர் மற்றும் உதவியாளர்கள் நடத்தினர்.

    இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 95 பெண்கள் உட்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×