search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு

    வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது பரவலாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று முதல் நிறுத்தப்பட்டது. இதனால் அணைக்கு கூடுதல் தண்ணீர் வருகிறது. பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கொட்டக்குடி மூலவைகையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று 1989 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2611 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 66.76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 63.81 அடியாக உயர்ந்துள்ளது.

    தற்போது மதுரை குடிநீருக்காக 360 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 4381 மி. கன அடியாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஓரிரு நாளில் வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.70 அடி. வரத்து 1357 கன அடி. திறப்பு 1650 கன அடி. மஞ்சளாறு நீர்மட்டம் 51.60 அடி. வரத்து 59 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.37 அடி. வரத்து 53 கன அடி. திறப்பு 30 கன அடி.

    Next Story
    ×