என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  சேரன்மகாதேவி அருகே விபத்தில் என்ஜீனியர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேரன்மகாதேவி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்த என்ஜீனியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  நெல்லை:

  அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 30). இவர் சிவில் என்ஜீனியராக பணிபுரிந்து வந்தார். வேலை சம்பந்தமாக நேற்று தனது மோட்டார் சைக்கிளில் களக்காட்டிற்கு ராமமூர்த்தி சென்றார். பின்னர் வேலையை முடித்துவிட்டு கல்லிடைக்குறிச்சிக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

  இந்நிலையில் ராமமூர்த்தி சேரன்மகாதேவி- களக்காடு சாலையில் பத்தமடை பிரிவு ரோட்டின் அருகே வந்த போது சாலையின் குறுக்கே பன்றி ஒன்று திடீரென ஓடியுள்ளது. இதை பார்த்த ராமமூர்த்தி பிரேக் பிடித்துள்ளார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

  இதில் அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடந்த அவரை அப்பகுதியில் வந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×