
கடந்த 22-ந் தேதி 8 ஆயிரத்து 143 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று 6 ஆயிரத்து 943 கன அடியானது. இன்றும் அதே அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் 6 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்காளக 120 அடியாக நீடிக்கிறது.
இனி வரும் நாட்களில் நீர்வரத்து சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிய வாய்ப்புள்ளது.