search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்ன வெங்காயம்
    X
    சின்ன வெங்காயம்

    கோவை காய்கறி மார்க்கெட்டில் சின்னவெங்காயம் ரூ.120-க்கு விற்பனை

    கோவை காய்கறி மார்க்கெட்டில் சின்னவெங்காயம் ரூ.120-க்கு விற்பனையாகிறது. சிறிய ரக சின்னவெங்காயம் ரூ.100-க்கு விற்பனையாகிறது.
    கோவை:

    கோவை காய்கறி மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் பல்லடம், ஆலாந்துறை, துறையூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

    தற்போது கர்நாடகத்தில் பெய்த மழை காரணமாக அங்கு விளைச்சல் குறைந்தது. இதையடுத்து கர்நாடகத்தில் இருந்து கோவைக்கு குறைந்த அளவிலே சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. மேலும் ஆலாந்துறை, பல்லடம் பகுதிகளில் இருப்பு வைத்திருந்த சின்ன வெங்காயங்களே விற்பனைக்கு வருகின்றன. அதிலும் 2 வகையான சின்ன வெங்காயங்கள் உள்ளன. இதில் பெரிய சின்ன வெங்காயம் ரூ.120-க்கும், சிறியது ரூ.100-க்கும் விற்பனையாகிறது.

    இதேபோல் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. கர்நாடகாவில் தற்போது பெய்த மழையால் கோவை மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கோவை மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் ரூ.100-க்கு விற்கப்படுகிறது. வெங்காயம் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

    Next Story
    ×