search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள்.
    X
    தர்மபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள்.

    தர்மபுரி உழவர் சந்தையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை குறைவு

    தர்மபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ. 82-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    தர்மபுரி:

    தர்மபுரி 4 ரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் உழவர்சந்தை அமைந்துள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் பொதுமக்களின் கூட்டம் காய்கறிகளை வாங்க தர்மபுரி உழவர் சந்தையில் அலைமோதுகிறது. மேலும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது.

    உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    தக்காளி ஒரு கிலோ ரூ. 18-க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 24-க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ. 18-க்கும், அவரை ஒரு கிலோ ரூ. 22-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ. 150-க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ. 26-க்கும், பூசணிக்காய் விலை ரூ. 16-க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 82-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

    உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ. 24க்கும், கேரட் ஒரு கிலோ ரூ. 52-க்கும், பீட்ரூட் ஒரு கிலோ ரூ. 42-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 2-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×