search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடம்
    X
    பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடம்

    அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது - இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஒபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு வழக்குகள் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவது கேள்விக்குறியாக மாறிப்போனது.

    இதற்கிடையே, டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகிறது. பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தொண்டர்களிடம் இருந்து ஏற்கனவே விருப்ப மனுக்களை பெற்று முடிந்துள்ளது.

    இந்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 3,400 பேர் பங்கேற்றுள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் முறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் வார்டுகளில் அதிக எண்ணிக்கையில் வெற்றியை குவிப்பது குறித்தும், அதற்கான வியூகம் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு பேனர்கள் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×