search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு வழக்கில் கைது
    X
    திருட்டு வழக்கில் கைது

    லாரி டிரைவர்களிடம் செல்போன் திருட்டு - சிறுவன் உள்பட 3 பேர் கைது

    புதன்சந்தை அருகே, லாரி டிரைவர்களிடம் செல்போன் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நாமக்கல்:

    புதுச்சத்திரம் அருகே எஸ்.உடுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் திருப்பதி (வயது 40), லாரி டிரைவர். இவர் கடந்த 19-ந் தேதி செல்லப்பம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி உள்ளார். அதேபோல் தங்கராசு என்ற டிரைவரும், மற்றொரு லாரியில் தூங்கிக்கொண்டு இருந்து உள்ளார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் லாரி டிரைவர்கள் திருப்பதி, தங்கராசு ஆகியோரிடம் இருந்து செல்போன்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து டிரைவர் திருப்பதி அளித்த புகாரின்பேரில் நல்லிப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையிலான போலீசார் முதலைப்பட்டி மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஸ்கூட்டரில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர்கள் 3 பேரும் மல்லூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த பூபதி (20), ஜனார்த்தனன் (20) மற்றும் 15 வயது நிரம்பிய சிறுவன் என்பதும், மேலும் அவர்கள் செல்லப்பம்பட்டியில் லாரி டிரைவர்களிடம் செல்போன்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து செல்போன்கள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். பின்னர் பூபதி, ஜனார்த்தனன் ஆகியோரை சேலம் மத்திய சிறையிலும் மற்றும் 15 வயது நிரம்பிய சிறுவன் சேலம் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×