search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
    X
    லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    காரிமங்கலம் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதி கவிழ்ந்தது

    காரிமங்கலம் அருகே இன்று காலை தடுப்பு சுவரில் லாரி மோதி கவிழ்ந்ததில் டிரைவர் , கிளினீர் லேசான படுகாயம் அடைந்தனர்.
    காரிமங்கலம்:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரி பருத்தி பாரம் ஏற்றி கொண்டு தேனி மாவட்டத்திற்கு செல்ல புறப்பட்டது. இன்று காலை தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அகரம் பிரிவு பகுதியில் லாரி திடீரென கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. 

    இதில் லாரியில் இருந்த டிரைவர், கிளினீரக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

    இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×