search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    வைகை அணையில் இருந்து திறக்கும் தண்ணீரின் அளவு குறைப்பு

    முறைநீர் பாசனத்தின்படி வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வந்தது. 71 அடி உயரமுள்ள வைகை அணையில் 65 அடி வரை தண்ணீர் எட்டியதால் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    3000 கன அடி தண்ணீர் வரை பாசனத்துக்கு திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. தற்போது திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதாலும் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

    நேற்று வரை 1560 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 260 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 60.03 அடியாக உள்ளது. நீர்வரத்து 3078 கன அடி. நீர் இருப்பு 3660 மி.கன அடி.

    முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 129.20 அடி. வரத்து 2102 கன அடி. திறப்பு 1600 கன அடி. இருப்பு 4525 மி.கன அடி மஞ்சளாறு அணை நீர்மட்டம் 52.40 அடி. வரத்து 55 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 383.67 மி.கன அடி. சோத்துப்பறை நீர்மட்டம் 126.42 அடி. வரத்து மற்றும் திறப்பு 78 கன அடி. இருப்பு 100.27 மி. கன அடி.

    Next Story
    ×