search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கையில் கட்டுடன் கைதிகள்
    X
    கையில் கட்டுடன் கைதிகள்

    புழல் ஜெயிலில் 120 கைதிகள் கை, கால் முறிந்து தவிப்பு

    புழல் ஜெயிலில் சுமார் 120 கைதிகள் கை, காலில் முறிவுடன் உள்ளனர். போதிய போலீசார் இல்லாததால் கைதிகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
    செங்குன்றம்:

    புழல் ஜெயிலில் விசாரணை கைதிகள் 1500-க்கும் மேற்பட்டோரும், தண்டனை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோரும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    குற்ற வழக்கில் சிக்குபவர்கள் பலர் தப்பி ஓடும்போது, கழிவறையில் வழுக்கி விழுந்தும் கை, கால்களில் முறிவு ஏற்பட்டு விடுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவர்கள் கை, கால்களில் முறிவுடன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இதன்படி சுமார் 120 கைதிகள் கை, காலில் முறிவுடன் ஜெயிலில் உள்ளனர். அவர்களுக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்புவது வழக்கம்.

    புழல் ஜெயிலில் 2 டாக்டர்கள், 3 ஆண், 2 பெண் என மொத்தம் 6 செவிலியர்கள், ஒரு மருந்தாளுனர் மட்டுமே உள்ளனர். சமீப காலமாக எலும்பு முறிவுடன் ஜெயிலுக்கு வரும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இங்குள்ள டாக்டர்கள் சிகிச்சை அளிக்க திணறி வருகின்றனர்.

    கைதிகளை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்போது பாதுகாப்புக்காக போலீசார் தேவைப்படுகிறார்கள்.

    போதிய போலீசார் இல்லாததால் கைதிகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஜெயில் மருத்துவ அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிகிறது. இதேபோல் ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியிலும் கூடுதல் வசதி செய்து தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

    Next Story
    ×