search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    சேப்பாக்கத்தில் தடையை மீறி போராட்டம்- திருமாவளவன் உள்பட 1800 பேர் மீது வழக்கு

    சென்னை சேப்பாக்கத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் உள்பட 1800 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    அயோத்தி தீர்ப்பை கண்டித்து சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் அருகே நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட 26 அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 1800 பேர் வரையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    இருப்பினும் தலைவர்களும், கட்சி தொண்டர்களும் இதில் திரளாக கலந்து கொண்டனர். அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமாவளவன் ஜவாஹிருல்லா, தெகலான் பாகவி, வேல்முருகன், டைரக்டர் கவுதமன் உள்பட 26 தலைவர்கள் என மொத்தம் 1800 பேர் மீது வழக்கு போடப்பட்டது.

    சேப்பாக்கம் வாலாஜா சாலையில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அளவுக்கு சாலையை மறித்து மேடை அமைத்ததாகவும், மத்திய அரசை கண்டித்து பேனர் வைத்ததாகவும், கோ‌ஷங்களை எழுப்பியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
    Next Story
    ×