search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    ராதாபுரம் தொகுதி தேர்தல் மறு ஓட்டு எண்ணிக்கை முடிவை வெளியிட 29-ந்தேதி வரை தடை நீட்டிப்பு

    ராதாபுரம் தொகுதி மறு ஓட்டு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ. 29-ம் தேதி வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரையிடம் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு 49 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

    இன்பதுரை வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் ஓட்டுகள் மற்றும் கடைசி 3 சுற்று வாக்குகளை எண்ண உத்தரவிட்டது.

    சென்னை ஐகோர்ட்

    இதையடுத்து ஐகோர்ட்டில் வைத்து மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது. ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து இன்பதுரை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடைவிதித்தது. அடுத்தடுத்து நடந்த விசாரணையின் போது தேர்தல் முடிவை வெளியிடுவதற்கு தடை நீட்டிக்கப்பட்டது.

    இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் முடிவை வெளியிடுவதற்கான தடையை வருகிற 29-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இறுதி விசாரணை குறித்து 29-ந்தேதி முடிவு செய்யப்படும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக அப்பாவு, இன்பதுரை தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
    Next Story
    ×