search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசாரணை
    X
    விசாரணை

    நிலக்கோட்டை அருகே வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பெண் யார்?- போலீஸ் விசாரணை தீவிரம்

    நிலக்கோட்டை அருகே ஆற்றில் அடித்து வரப்பட்ட பெண் உடல், ஜல்லிக்கட்டு காளை உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நிலக்கோட்டை:

    தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் ஆண்டிபட்டி வைகை அணையில் இருந்து பெரியார் பிரதான சிமெண்டு கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கால்வாயில் தண்ணீர் கரை புரண்டு செல்கிறது.

    இந்த தண்ணீர் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட விவசாயத்திற்கு செல்கிறது. இப்படி வரும் தண்ணீரில் கால்வாய் பகுதியை ஒட்டியுள்ள கிராம பொதுமக்கள் குளிப்பதற்கும், ஆடு, மாடுகளை குளிப்பாட்டுவதற்கு செல்லும் போதும் தவறி விழுந்து விடுகிறார்கள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்றங்கரை கிராமப்புற பகுதி மக்களில் அடையாள தெரியாத பெண் மாட்டுடன் இழுத்து வரப்பட்டதை வத்தலக்குண்டு அருகே உள்ள ஏ.வாடிப்பட்டி பொதுமக்கள் பார்த்து விருவீடு, விளாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே போலீசார் கால்வாயில் தேடினர். இந்த நிலையில் நிலக்கோட்டை அருகே உள்ள மட்ட பாறை 10 கண் பாலத்தில் தேங்கி கிடந்த குப்பைகளுடன் மாடு, பெண் பிணம் ஒதுங்கியது. உடனே நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு விளாம்பட்டி போலீசார் தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கால்வாயில் மிதந்த பிணத்தை கரைக்கு மீட்டு வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக பெண் பிணம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அந்த பெண் எப்படி ஆற்றில் அடித்துவரப்பட்டார்? கால்வாயில் குளித்தபோது வெள்ளத்தில் சிக்கினாரா? மாடு வேறு இடத்தில் இருந்து வந்ததா? பெண்ணின் உடல் அழகிய நிலையில் இருந்ததால் யாரும் கொலை செய்து ஆற்றில் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

    Next Story
    ×