search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த கோவில்.
    X
    கொள்ளை நடந்த கோவில்.

    செய்யாறில் 3 கோவிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை

    செய்யாறில் 3 கோவில்களின் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    செய்யாறு:

    செய்யாறு டவுன் காந்தி ரோட்டில் அறநிலையத் துறைக்கு சொந்தமான பாதாள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் காலை 6 மணிக்கு திறந்து பூஜைகள் முடிந்து இரவு 9.30 மணிக்கு நடை சாத்தபடுகிறது.

    கோவில் காவலாளி தேவன் இன்று காலை கோவிலை திறக்க வந்தார். அப்போது மெயின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து கோவில் நிர்வாகிகள் பாபு, கோபால் மற்றும் கோவில் அறநிலையத்துறை ஆய்வாளர் தண்டபாணி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளைபோன சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடம் காட்டு தீ போல் பரவியதால் கோவில் முன்பு திரளானோர் குவிந்தனர்.

    இது குறித்து செய்யாறு டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் செய்யாறு பங்களா தெருவில் பஞ்ச மூர்த்தி விநாயகர் கோவில், சீனிவாச பெருமாள் கோவிலிலும் உண்டியல் உடைத்து பணத்தை கொள்ளை கும்பல் திருடி சென்றுள்ளனர். 3 கோவில்களிலும் உண்டியல் பணம் ரூ. 1 லட்சம் வரை கொள்ளை போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ஒரே நாளில் 3 கோவில்களில் கொள்ளை நடந்துள்ளது. பக்தர்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்து 3 கோவில்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியதா இல்லை வெவ்வேறு கும்பலா என விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×