search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    தூத்துக்குடி அருகே இரவு நேர மின்வெட்டால் மக்கள் அவதி தி.மு.க. கண்டனம்

    தூத்துக்குடி அருகே அறிவிக்கப்படாத இரவு நேர மின்வெட்டு கடந்த 10 நாட்களாக இருந்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க.வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு பகுதியில் அறிவிக்கப்படாத இரவு நேர மின்வெட்டு கடந்த 10 நாட்களாக இருந்து வருகிறது. தற்போது மழை காலமாக இருப்பதால் கொசு தொல்லையும் மிக அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தூக்கம் இன்றி அவதியடைந்துள்ளனர். கடைகள் மற்றும் ஓட்டல்களில் வியாபாரம் செய்ய முடியாமல் வணிகர்கள் தவித்து வருகின்றனர்.

    தற்போது பகலிலும் மின்வெட்டு பலமுறை ஏற்படுகிறது. மின் மிகை மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டதாக கூறும் தமிழக அரசு தூத்துக்குடியில் ஏன் மின் வெட்டு நிலவுகிறது என்பதை விசாரிக்க வேண்டும். மேலும் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

    தூத்துக்குடியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் மின் நிலையம், உப்பளம், துறைமுகம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நிறைந்த தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதியில் உள்ள 70 சதவீத பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    மேலும் பள்ளி ஆண்டு தேர்வுக்காக பாடங்கள் படித்து வரும் மாணவ-மாணவிகளும் அவதி அடைந்துள்ளனர். எனவே இந்த இரவு நேர அறிவிக்கப்படாத மின் வெட்டை அரசு உடனடியாக சரிசெய்து பொதுமக்களின் அவதியை போக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×