search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையில் 3 நாட்களுக்கு இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு - தனியார் வானிலை மையம் தகவல்

    சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூய மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை

    வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. ஆனால் சென்னையில் எதிர்பார்த்த அளவுக்கு பலத்த மழை பெய்யவில்லை.

    சில நாட்கள் மட்டும் ஓரளவுக்கு மழை பெய்தது. இன்று அதிகாலை சென்னையில் பல இடங்களில் மழை பெய்தது. அதன் பிறகு மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

    வானிலையை பார்க்கும் போது மேகமூட்டங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

    இதனால் சில இடங்களில் மிதமான முதல் பலத்த மழை அல்லது இடியுடன் கூய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு தினமும் விட்டு விட்டு மழை பெய்யும். அதே போல் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றார்.

    சென்னை வானிலை மைய அதிகாரி புவியரசன் கூறியதாவது:-

    தமிழகத்தில் நிலவி வந்த வெப்ப சலனம் காரணமாகவும், வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சியாலும், சென்னை காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

    மேலடுக்கு சுழற்சி வலுவாக இல்லாததால் மழை நாளை குறைய தொடங்கி விடும்.

    ஆனாலும் உள் மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் மழை அதிகம் பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×