search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தற்கொலை முயற்சி
    X
    தற்கொலை முயற்சி

    நிலத்தை மோசடி செய்ததால் பெண் தற்கொலை முயற்சி

    மணப்பாறை அருகே நிலத்தை மோசடி செய்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டி போலீஸ் பகுதியில் உள்ள தோப்புப்பட்டியை சேர்ந்தவர் சேவியர். இவரது மனைவி சேஷம்மாள். அதே பகுதியை சேர்ந்தவர் சூசை. இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். 

    இந்தநிலையில் சேஷம்மாள், சூசையிடம் மாத வட்டிக்கு ரூ.2,50,000 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. தனக்கு சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கினார். சேஷம்மாள் கடன் முழுவதையும் அடைத்து விட்டு, தனது நிலப்பத்திரத்தை திருப்பி கேட்டபோது, சூசை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. 

    மேலும் சூசை , சேஷம்மாளிடம் நிலப்பத்திரத்தை கிரயப்பத்திரமாக மாற்றி எழுதி ஏமாற்றி வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால மனமுடைந்த சேஷம்மாள் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மணப்பாறை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு  உயிருக்கு ஆபத்தான நிலையில் சேஷம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×