search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கமல்
    X
    கமல்

    ரஜினியுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை- கமல்

    நானும், ரஜினியும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தின் மேம்பாட்டிற்காக நானும், ரஜினியும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

    நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான். 

    படிக்காதவர்களுக்கு வழங்கும் முதல் கவுரவ டாக்டர் பட்டம் எனக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி அளிக்கிறது. 

    நல்ல தலைவராக இருக்கும் பட்சத்தில் கோத்தபய ராஜபக்ச நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை. 
    ரஜினிகாந்த்
    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அதிசயத்தால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனதாக கூறியது நினைவிருக்கலாம்.
    Next Story
    ×