
சாயர்புரம்:
தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் கந்தசாமி(வயது 65). இவர் அடிக்கடி தனது குடும்பத்தினருடன் சண்டை போட்டுவிட்டு கோவில்களில் தர்மம் எடுத்து பிழைத்து வருவார். பின்னர் மீண்டும் குடும்பத்தோடு சேர்ந்து சிறிது காலம் வசிப்பார்.
வழக்கம்போல் ஆறு மாதங்களுக்கு முன்பு மீண்டும் தன் குடும்பத்துடன் சண்டை போட்டுவிட்டு கோவிலில் தர்மம் எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் சம்பவத்தன்று அவர் ஏரல் சேர்மன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்களுக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே அவரது மகன் முருகன் இதுகுறித்து ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் முதியவரின் மர்மச்சாவு குறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.