search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி மலை ரெயில்
    X
    ஊட்டி மலை ரெயில்

    மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் சீரமைப்பு பணி தீவிரம்

    ஊட்டி மலை ரெயில் பாதை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற உள்ளதால் மலை ரெயில் போக்குவரத்து 9 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் பாதையில் மீண்டும் கல்லாறு-குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே 23 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரெயில் பாதையில் பாறாங்கல் உருண்டு விழுந்து மண் சரிந்து ரெயில் பாதையை மூடியது மரக்கிளைகள் சாய்ந்து ரெயில் பாதையின் குறுக்கே விழுந்தன.

    இதுபற்றி சேலம் ரெயில்வே கோட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலையடுத்து மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து மற்றும் ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து வருகிற 24-ந்தேதி வரை ரத்து செய்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. ரெயில் பாதை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற உள்ளதால் மலை ரெயில் போக்குவரத்து 9 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×