search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கொள்ளை
    X
    கொள்ளை

    திருமுல்லைவாயல் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை

    திருமுல்லைவாயல் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆவடி:

    திருமுல்லைவாயல் அடுத்த அண்ணனூர், சிவசக்தி நகர், ராமாயணம் தெருவை சேர்ந்தவர் சாய்ராம் (49). இவர் பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தாம்பரத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு சென்று இருந்தார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த எல்.இ.டி. டிவி, லேப்டாப், வெள்ளி டம்ளர் மற்றும் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.

    ஆவடி காமராஜர் நகரில் வசித்து வருபவர் சுரேஷ். என்ஜினீயர். நேற்று அதிகாலை இவரது வீட்டு பூட்டை மர்ம நபர் உடைத்த சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதும் கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான்.

    இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் ரோந்து சென்றபோது காமராஜர் நகர், பெருமாள் கோவில் அருகே சந்தேகத்திற் கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அவன் ராயப்பேட்டையை சேர்ந்த ஜாபர் பாஷா என்பதும், என்ஜினீயர் சுரேஷ் வீட்டில் கொள்ளையில் ஈடுபட முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து ஜாபர் பாஷாவை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×