search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    காரைக்கால் அருகே தனியார் மதுக்கடை காவலாளி அடித்து கொலை

    காரைக்கால் அருகே பணத்தகராறில் தனியார் மதுக்கடை காவலாளியை அடித்து கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காரைக்கால்:

    நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள பனங்குடி சங்கமங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் விமல்ராஜ்  (வயது 30). இவர் புதுவை மாநிலம் காரைக்கால் அருகே கீழவாஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் காவலாளியாக இருந்தார். இவர் தினசரி இரவு நேர சாப்பாட்டுக்காக கடையின் கேசியர் மனோஜ் என்பவரிடம் பணம் வாங்குவது வழக்கம். அதன்படி இரவு பணியில் இருந்த விமல்ராஜ் கடையில் இருந்த மனோஜ்ஜிடம் சாப்பாட்டுக்குரிய பணம் கேட்டார்.  

    அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்ததும் மனோஜ்க்கு ஆதரவாக மதுக்கடை ஊழியர்கள் காரைக்கால் மேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோபால்(39), காரைக்கால் சாமனாங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் ஆகியோர் வந்தனர். இவர்கள் 2 பேரும் விமல்ராஜிடம் தட்டிக் கேட்டனர்.  அப்போது விமல் எனக்கு வழங்க கூடிய பணத்தை வழங்க வேண்டும் என்று மீண்டும் கூறினார். இதனால் மீண்டும் வாக்குவாதம் வலுத்தது. 

    ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து அருகில் கிடந்த விறகு கட்டைகளை எடுத்து விமல்ராஜை  சரமாரியாக தாக்கினர். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந்தார். இதனை பார்த்ததும் மனோஜ் உள்பட 3 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். இதுபற்றி அறிந்த விமல்ராஜ் உறவினர் யோசுவா விரைந்தார். மயங்கி கிடந்த விமல்ராஜை தூக்கி கொண்டு நாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனாலும் விமல்ராஜின் நிலைமை மோசமானது. எனவே உடனடியாக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே விமல் ராஜ் இறந்தார்.

    இதுகுறித்து திருமலைராயப்பட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்து விமல்ராஜை அடித்து கொன்றதாக காரைக்கால் நிரவி கள்ளர் தெருவை சேர்ந்த மனோஜ், கோபால், அலெக்ஸ்சாண்டர் ஆகியோரை கைது செய்தனர். 
    Next Story
    ×