search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்மட்டம் 7-வது நாளாக 120 அடியாக நீடிப்பு

    நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 7 நாட்களாக 120 அடியாக நீடித்து வருகிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை இந்த ஆண்டு 4-வது முறையாக நிரம்பியது. தற்போது அணைக்கு 6 ஆயிரத்து 43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 5 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 7 நாட்களாக 120 அடியாக நீடித்துவருகிறது. இதனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையை நம்பி உள்ள மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×