search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரபாண்டி ஆறுமுகம் பற்றிய நூலை வெளியிட்ட முக ஸ்டாலின்
    X
    வீரபாண்டி ஆறுமுகம் பற்றிய நூலை வெளியிட்ட முக ஸ்டாலின்

    குடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க - முக ஸ்டாலின் பெருமிதம்

    சேலத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், குடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க. என குறிப்பிட்டுள்ளார்.
    சேலம்:

    சேலத்தில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர், "திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்" என்ற முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டார். அதன்பின், விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    நான் மிசா சட்டத்தில் சிறையில் இருந்தேனா, இல்லையா என்பது மிக முக்கியமான விவாதமா? ஸ்டாலின் தி.மு.க.வை சேர்ந்தவரா என கேட்பது எப்படி முட்டாள்தனமானதோ, அதே போன்ற முட்டாள்தனமானதுதான் மிசா விவாதமும்.

    மிசா சட்டத்தில் நான் மட்டுமா சிறையில் இருந்தேன்? தி.மு.க. தலைவர்கள் பலரும் பல்வேறு சிறைகளில் இருந்தனர். மிசாவில் நான் சிறையில் இருந்தது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல பொய்யான சர்ச்சைகள் பரப்பப்படுகிறது.

    நெருக்கடி நிலையை எதிர்த்த ஒரே கட்சி தி.மு.க. தான். ஆட்சி கலைந்தாலும் நெருக்கடி நிலையை ஆதரிக்க மாட்டேன் என கூறியவர் கருணாநிதி.

    தி.மு.க. குடும்ப அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். குடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க. தி.மு.க.வில் உள்ளவர்கள் கழகத்திற்காக குடும்பம் குடும்பமாக உழைத்தார்கள்.

    தற்போது நடைபெறும் ஆட்சியின் காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு மீதமுள்ளது. அதனால் நாம் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்றார்.
    Next Story
    ×