search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருப்பூரில் அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் நிறுவனத்துக்கு ‘சீல்’

    திருப்பூரில் அனுமதியின்றி செய்ல்பட்ட குடிநீர் நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் உரிய அனுமதியின்றி ஒரு தனியார் குடிநீர் நிறுவனம் செயல்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் தங்கவேல், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் திடீரென சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த நிறுவனம் உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

    மேலும் பல்வேறு நிறுவனங்களில் உள்ள லேபிள்களுடன் 20 லிட்டர் கேன்களில் குடிநீர் பிடித்து உணவு பயன்பாட்டிற்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அங்கு இருந்த 20 லிட்டர் தண்ணீர் கேன்களை பறிமுதல் செய்தனர். உரிய அனுமதியின்றி செயல்படும் இந்த நிறுவனம் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 இன் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.
    Next Story
    ×