search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
    X
    அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

    அரசின் திட்டங்களை பெற்று பொதுமக்கள் பயன் அடைய வேண்டும்- உடுமலை ராதாகிருஷ்ணன் பேச்சு

    அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்கள் பெற்று பயன் அடைய வேண்டும் என்று குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில், முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 30 பயனாளிகளுக்கு ரூ.13,92,000 மதிப்பில் வீட்டுமனைப் பட்டாக்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 35 பயனாளிகளுக்கு 14,70,000 மதிப்ப்ல் வீட்டுமனைப் பட்டடாக்களும், 324 பயனாளிகளுக்கு ரூ.38,88,000 மதிப்பில் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி மற்றும் முதிர்கன்னி உதவித்தொகையினையும், 2 பயனாளிகளுக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் உதவித்தொகையையும் வழங்கினார்.

    1 பயனாளிக்கு ரூ.1,00,000 மதிப்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து விபத்து நிவாரண உதவித்தொகையினையும், 1 பயனாளிக்கு ரூ.95,100 மதிப்பில் பேரிடர் நிவாரணத்தொகையினையும், 107 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் மற்றும் பட்டா உட்பிரிவு மாறுதல் ஆணையினையும், வேளாண்மை மற்றும் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 38 பயனாளிகளுக்கு ரூ.32,60,200 மதிப்பில் வேளாண் உபகரணங்கள் வழங்கினார்.

    1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் விபத்து நிவாரண தொகையினையும், 58 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.29 லட்சம் மதிப்பில் மானிய தொகையினையும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என 598 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    முதல் அமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில், அனைத்து வருவாய் கிராமங்களிலும் மாநகர, நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அனைத்து துறைகளின் சார்பில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, புதிய மின்னனு குடும்ப அட்டை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சுமார் 30,591 விண்ணப்ப மனுக்களை பெறப்பட்டது. அதனடிப்படையில், நமது மாவட்டத்திலுள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தங்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்கள் நல்ல முறையில் பெற்று பயன் அடைய வேண்டும். மனிதர்களுக்கு உள்ளதை போன்று கால்நடைகளுக்கும் சிகிச்சை பெறுவதற்காக 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட 24 மணிநேரம் செயல்படும் அம்மா ஆம்புலன்சு சேவை 32 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து குடிமங்கலம் வட்டாரத்தில் 347 பயனாளிகளுக்கும், மடத்துக்குளம் வட்டாரத்தில் 641 பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    முன்னதாக, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், புக்குளம் ஊராட்சி புக்குளம் ஆதிதிராவிடர் காலனியில், ஆதிதிராவிடர் மேம்பாட்டு நிதி பணிகள் திட்டத்தின் கீழ், குடியிருப்புகளில், ரூ.47.00 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதி திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கான பூமி பூஜையையும் தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் இந்திரவள்ளி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் விமல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், திருப்பூர் மாவட்ட ஆவின் சங்கத்தலைவர்மனோகரன், தாசில்தார்கள் தயானந்தன் (உடுமலை), ஜெய்சிங் சிவகுமார் (மடத்துக்குளம்), குடிமங்கலம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×