என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உள்ளாட்சி தேர்தலை கண்டு தி.மு.க. மிரண்டு விட்டது- அமைச்சர் ஜெயக்குமார்
ராயபுரம்:
அ.தி.மு.க. சார்பில் வட சென்னை தெற்கு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் நடை பெற்றது.
இதில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும். அ.தி.மு.க. அரசு 2011-ல் இருந்து உள்கட்டமைப்புகளை சிறப்பாக செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக அமைதிப் பூங்காவாக காட்சி அளிக்கிறது.
இதைத்தான் உள்ளாட்சித் தேர்தலை பொதுமக்கள் கவனிப்பார்கள். பொது மக்களின் தேவையை 100 சதவீதம் நாங்கள் பூர்த்தி செய்து உள்ளோம். எனவே அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் மிரட்சியோடு பார்க்கிறது. தி.மு.க. ஒரு கோடீஸ்வரர் கட்சி. அங்கு விருப்பமனு ஒன்றுக்கு 50 ஆயிரம் வாங்குகிறார்கள். தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டது குறித்து ஸ்டாலின் யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை வெளியிடுகிறார். அது ஒரு நிர்வாக ரீதியானமாறுதல் தான்.
இவருக்கு தேர்தலை கண்டு பயமில்லை என்றால் தேர்தலில் நேரடியாக சந்திக்க வேண்டியதுதானே. அதேபோல் போலீஸ் நவீனப்படுத்துதல் காலத்தின் கட்டாயம். அதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த டெண்டரும் ரூ.57 கோடி தான். ஆனால் ஸ்டாலின் யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையில் கொஞ்சம் கூட யோசிக்காமல் 350 கோடி ஊழல் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்னும் டெண்டரை விடவில்லை. அது பற்றி முடிவு செய்யவில்லை. ஆனால் இதில் ஏதாவது தவறு நடக்கலாம் என ஒரு கடிதம் வந்ததால் அந்த கடிதத்தை முதல்வர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விசாரிக்க அனுப்பியுள்ளார்.
இதுதான் நடந்தது. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என இதுபோன்ற அறிக்கைகள் விடுகிறார். அதற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இல்லை என்பதை கடந்த விக்கிரவாண்டி தேர்தலும் நாங்குநேரி தேர்தலும் காட்டியுள்ளது. வெற்றிடம் இருந்தால் பொதுமக்கள் நோட்டாவுக்கு தான் வாக்களிப்பார்கள்.
வெற்றிடம் இல்லாததால் தான் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் எங்களை வெற்றி பெறச் செய்தனர். நாங்கள் தேர்தல் பணிகளில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம்.
அனைத்து பணிகளையும் முடித்து இப்போது விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். கூட்டணிக் குறித்து கட்சியினருடன் உரிய முறையில் பேசி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்